சென்னை: வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தில் தினமலர் தனி சேனலை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதை பாலோ செய்வதன் மூலம் புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
டெலிகிராம், X, பேஸ்புக், யூடியூப், த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தினமலர் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
காலத்திற்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாக, தற்போது வாட்ஸ் ஆப்பிலும் தனி சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக தினமலர் தெரிவித்துள்ளது.
இந்த சேனலை பாலோ செய்தால் நாட்டு நடப்புகள், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம் உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமலர் பகிர்ந்துள்ள வாட்ஸ் ஆப் சேனல் லிங்க்: https://whatsapp.com/channel/0029VbBmjSpBfxoFMMurUx19. லிங்கை திறந்த பிறகு மேலே வலது மூலையில் உள்ள “பாலோ” பொத்தானைத் தொட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




