தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (டிவிஏசி) டிஜிபி பதவியில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்துள்ளது.
ஏப்.23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் பல மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த இடமாற்றங்களில், அண்மையில் டிவிஏசி டிஜிபி பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்; அவர் உடனடியாக பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தேர்தல் கமிஷனில் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் உத்தரவின்படி சந்தீப் மிட்டல் தற்போது ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் டிவிஏசி டிஜிபியாக தொடர்கிறார்.




