சென்னை: ஏப்.23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை; திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கமல் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், வெளியிடப்பட்ட பட்டியலின்படி கமல் ஏப்.17 முதல் பிரசாரம் தொடங்கி, ஏப்.20 வரை மொத்தம் 26 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அட்டவணைப்படி ஏப்.17 அன்று துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம்; ஏப்.18 அன்று தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், வேளச்சேரி; ஏப்.19 அன்று அவிநாசி, கோவை தெற்கு; ஏப்.20 அன்று திருச்சி கிழக்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெறுகிறது.

மேலும், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.