அதிமுகவை விட்டு நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கவனக்குறைவான தவறொன்றை செய்தார்.

அங்கு தவெக வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டு, வாகனத்தில் இருந்தபடியே கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது, தவெகவின் ‘விசில்’ சின்னத்துக்கு பதிலாக அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

உடனே சுதாரித்துக் கொண்ட அவர், ‘இரட்டை இலை’ என்று தொடர்ந்து கேட்டு பழகிவிட்டதால் இப்படிச் சொல்லிவிட்டேன் என்று விளக்கம் அளித்து, பின்னர் தவெகவின் ‘விசில்’ சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.