சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் 5ம் கட்ட பிரசாரப் பயண அட்டவணையை திமுக வெளியிட்டுள்ளது. இந்த கட்டப் பயணம் ஏப்.13 அன்று திருவள்ளூரில் இருந்து தொடங்குகிறது.

திமுக அறிக்கையின்படி, ஏப்.13 மாலை 5 மணிக்கு திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி ஆகிய பகுதிகள் இடம்பெறுகின்றன. அதே நாளில் மாலை 7 மணிக்கு ராணிப்பேட்டை அம்மூர் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது; இதில் ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏப்.14 மாலை 5 மணிக்கு வேலூரிலும், மாலை 7 மணிக்கு திருப்பத்தூர் மண்டலவாடி மைதானத்திலும் பொதுக்கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வேலூர் கூட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம் ஆகிய பகுதிகளும், திருப்பத்தூர் கூட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளும் இடம்பெறுகின்றன.

ஏப்.15 மாலை 5 மணிக்கு காரிமங்கலம் பெரியாம்பட்டியிலும், மாலை 7 மணிக்கு சேலம் தேசிய நெடுஞ்சாலையிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. காரிமங்கலம் கூட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சேலம் கூட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளுடன் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி ஆகியவை இடம்பெறுகின்றன.

ஏப்.16 மாலை 5 மணிக்கு நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டிலும், மாலை 7 மணிக்கு பெரம்பலூர் குன்னம் பகுதியில் ஓதியம் பிரிவு அருகிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. நாமக்கல் கூட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளும், பெரம்பலூர் கூட்டத்தில் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளும் இடம்பெறுகின்றன.