சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரப் பாடல் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்தது. முகுல் வாஸ்னிக், கிரீஷ் ஷோடங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார். டில்லியில் பார்லிமென்ட் நடைபெறுவதால் ராகுல் இதுவரை பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை; இருப்பினும் விரைவில் நேரம் ஒதுக்கி பிரசாரம் செய்வார் என்றும் கூறினார்.
அரசியல் நிலைப்பாடு குறித்து, காங்கிரஸ் கட்சியினர் விஜய் பக்கம் இல்லை என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் கட்சியின் பக்கம் தான் நிற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் ராகுலுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்றும் கூறினார்.




