தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட் எனப்படும் ‘பூத் ஸ்லிப்’ வீடு வீடாக வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

தேர்தல் நாள் நெருங்குவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நேரத்தில், ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் முன்னெடுத்து வருகிறது.

புதியதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் வரிசை எண், பாகம் எண் போன்ற விவரங்கள் வழக்கத்தை விட பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளதால் எளிதில் அறிய முடியும்.

மேலும், ஸ்லிப்பில் கியூஆர் குறியீடும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்.17க்குள் தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் ஸ்லிப் சென்றடைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பூத் ஸ்லிப் மட்டும் கொண்டு வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.