திருச்செந்தூர் தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் பகுதியில் திறந்தவேனில் சென்ற பிரசாரத்தின் போது, பா.ஜ. தொண்டர் ஒருவர் அவருக்கு வேல் பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட இப்ராஹிம், திறந்தவேனிலில் நின்றபடி வேல் ஏந்தினார்.
அதன்பின், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் முதல் பாடலான “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்ற பாடலை முழுமையாக பாடி கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கல்வித் தகுதி விவரங்களை முறையாக காட்டவில்லை என தி.மு.க. வேட்பாளரை விமர்சித்து, பா.ஜ.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.




