நாக்பூர்: காங்கிரசில் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாகவும், தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளின் காரணமாக அவரை கட்சித் தலைமையிலிருந்து மாற்ற வேண்டும் என்ற குரல் வலுப்படுகிறது என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
காங்கிரசின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், முக்கிய முடிவுகள் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசித்த பிறகே எடுக்கப்படுவதாக கூறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, நாட்டில் அனைவரும் சமம் என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க விரும்பவில்லை என்றும், அவர்கள் அரசியலமைப்பை அழிக்க நினைக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த பட்னவிஸ், ராகுலுக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும், அவர் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி சந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், காங்கிரசுக்குள் நிலவும் மோதல்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க குறித்து ராகுல் பேசுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



