தமிழகத்தைச் சேர்ந்த பாஜ பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதில் தேர்தலுக்கான தயாரிப்புகள் மற்றும் பூத் மட்டத்தில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் விளக்கினார்.
அப்போது, தேஜ கூட்டணியை மக்கள் “மாற்றத்துக்கான கூட்டணி” என பார்க்கிறார்கள் என்று மோடி தெரிவித்தார். மேலும், திமுக மத்தியில் அங்கம் வகித்த காலத்தில் தமிழகத்துக்கு திட்டங்கள் வரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்தியில் பாஜ அரசு அமைந்த பிறகு ரயில்வே, சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டதாகவும், பாஜ ஆட்சிக்குப் பிறகே தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முன்பு எப்படி இருந்தது, பாஜ ஆட்சியில் எப்படி மாறியுள்ளது என்பதை மக்கள் உணர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கோவையைச் சேர்ந்த ரம்யா என்பவருடன் உரையாடிய போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து தமிழகத்தில் கவலைகள் உள்ளதாக கூறி, பாஜவினர் சிறிய கூட்டங்கள் நடத்தி முதல்முறை வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.




