பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கவர்னர் சையத் அரிஃப் ஹஸ்னைனிடம் பாட்னாவில் சமர்ப்பித்தார். சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று, 10ஆம் தேதி எம்பியாக அவர் பதவியேற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் புதிய அரசின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, நாளை முறைப்படி பதவியேற்க உள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்–பாஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்தார்.
தான் பதவி விலகும் முடிவை எடுத்ததாகவும், அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் நிதிஷ்குமார் அறிக்கையில் தெரிவித்தார். புதிய அரசு வளர்ச்சி பணிகளை முன்னெடுக்கும் என்றும், அதற்கு தனது ஒத்துழைப்பும் ஆலோசனையும் இருக்கும் என்றும் அவர் கூறினார்; இனி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சாம்ராட் சவுத்ரி, நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி வகித்து வந்தார்.





