வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக சார்பில் மாவட்டம் மாவட்டமாகச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கே.வி.குப்பத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.
இந்தப் பயணத்தின் போது பொதுமக்களுடனும் கல்லூரி மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடினார். சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடியே வாக்காளர்களிடம் ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.





