திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற ரோடு ஷோவில், தன்னை “100 சதவீதம் நம்பலாம்” என்று விஜய் உறுதி அளித்தார்.
அவர் பேசுகையில், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் MSME நிறுவனங்கள் அதிகமாக இருந்தாலும், நாட்டிலேயே அதிகமாக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இதற்கு திமுக ஆட்சியே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
விவசாயிகளுக்கான திட்டமாக, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் நலனுக்காக, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் வழங்குவது குறித்து தமது அரசு கனிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
ரோடு ஷோவை காண பெருந்திரளானோர் கூடிய நிலையில், வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட சுமார் 10 பேர் மயங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.





