தமிழக வெற்றிக்கழக (த.வெ.க) தலைவர் விஜய், இன்று திருப்பூரில் பிரசாரம் மற்றும் ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளார். இதற்கான அனுமதி விவகாரம் நீண்ட நேரம் இழுபறியாக இருந்த நிலையில், திருப்பூர் மாநகர போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பல மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான அனுமதி நேற்று மாலை வரை உறுதியாகவில்லை.
இந்த நிலையில், த.வெ.க தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் திருப்பூரில் முகாமிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். போலீசார் பல கேள்விகளை எழுப்பி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வருகிறார். அவிநாசி கைகாட்டி பகுதியில் மதியம் 3.00 மணிக்கு ரோடு ஷோ தொடங்கி, பெருமாநல்லூர் வழியாக திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பூலுவபட்டி வரை பிரசார வேனில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வழியில் ஓரிடத்தில் வேனிலிருந்தபடியே அவர் பேச உள்ளார்.





