விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததாக கூறி, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த படம் விஜயின் கடைசிப் படம் என குறிப்பிடப்படுகிறது. சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல காரணங்களால் படம் இன்னும் வெளியாவாத நிலையில், தற்போது அது இணையத்தில் வெளியாகியதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணையைத் தொடர்கின்றனர். மேலும் கோவையில் உள்ளூர் கேபிள் டிவியில் படம் ஒளிபரப்பப்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டபோது, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தெரிவித்தார்.





