தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கெஜ்ரிவாலுக்கு நெருங்கிய நட்பு இருப்பதாகவும், இதன் அடிப்படையில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தி.மு.க. அதனை மறுத்ததாக தகவல்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியினர் தி.மு.க. கூட்டணிக்காக பிரசாரம் செய்து வருவதாகவும், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட கெஜ்ரிவால் வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.