தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

நடந்து வரும் சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜ. போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளின் பா.ஜ. வேட்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்த பிரசாரம் நடைபெறுகிறது.

திட்டமிட்டபடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை ஹெலிகாப்டரில் மோடி நாகர்கோவிலுக்கு வருகிறார். அதன் பின்னர் ரோடு ஷோவில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

பிரதமருடன் திறந்த ஜீப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரும் 18ஆம் தேதி கோவையில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார்.