தர்மபுரியில் செவ்வாய்க்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு, காலை நடைபயிற்சியின் போதே திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மாவட்டம் தோறும் சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தர்மபுரியில், கோட்ட தெரு பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், அரசின் திட்டங்களை எடுத்துரைத்து திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்பின்போது சிலர் அவருடன் கைகுலுக்கி, செல்பி எடுத்துக் கொண்டனர்.




