துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளை 31 ஆகக் குறைக்கும் முயற்சி நடைபெறுகிறது என கூறினார். இதுபோன்ற முயற்சிகளை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், இது தமிழக உரிமைகளை பறிக்கும் இன்னொரு நடவடிக்கை எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய பா.ஜ. அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மாநில அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய உதயநிதி, கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி ரூ.2,000 வழங்குவோம் என்றும், அனைத்து மகளிருக்கும் ரூ.8,000 கூப்பன் வழங்கி வீட்டிற்கு தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்க உதவுவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும், பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஒரே முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனவும் அவர் கூறினார்.





