மஹாராஷ்டிராவின் நாசிக்கில் இயங்கும் டி.சி.எஸ். நிறுவனத்தின் பி.பி.ஓ. அலுவலகத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பான புகார்களை விசாரித்தபோது, பெண் ஊழியர்களை மாட்டிறைச்சி உண்ணவும் நமாஸ் செய்யவும் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரியில் பணியிடத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. விசாரணையின் போது 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததாக கூறி புகாரளித்ததாக போலீசார் கூறினர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ‘டீம் லீடர்’கள் மூலம் பாலியல் துன்புறுத்தல், உடல் மற்றும் உடை குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள், மத ரீதியான விமர்சனங்கள் ஆகியவற்றை சந்தித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும், புர்கா அணியவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
இந்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டாய மதமாற்றக் கோணத்தில் மலேஷியாவைச் சேர்ந்த மதபோதகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவர் நிடா கான் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.





