தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.

மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏற்றி, மறுவரையறை திட்டத்தின் நகலை எரித்து அவர் போராட்டம் நடத்தினார். தமிழகம் பாதிக்கப்பட்டால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியுடன் நடந்த பேச்சில், மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தை பார்லிமென்டில் முன்னின்று நடத்துமாறு ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்பதற்கான முயற்சிகளுக்கு திமுக எம்பிக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என அவர் உறுதி அளித்தார்.