உட்கட்டமைப்பு வளர்ச்சியில் தமிழகத்தின் நகரங்கள் உலகளவில் முன்னேறி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் வெளியான ஒரு வீடியோவில், சென்னை மெட்ரோவில் (கோயம்பேடு நிலையம் உட்பட) மாற்றுத்திறனாளி ஒருவர் வீல் சேர் மூலம் எளிதாக பயணம் செய்த காட்சி இடம்பெற்றது. அந்த வீடியோவை பகிர்ந்து முதல்வர் தனது கருத்தை வெளியிட்டார்.
“இது தொடக்கம்தான்” என குறிப்பிட்ட அவர், StalinStatement எனும் தனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் 2030க்குள் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் நடைப்பாதை மற்றும் மரங்கள் கொண்ட ‘கம்ப்ளீட் ஸ்ட்ரீட்ஸ்’ உருவாக்கப்படும் என அறிவித்துள்ளதாக கூறினார்.
மேலும், இதே திட்டம் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் மாநிலத்தின் நகர உட்கட்டமைப்பு உலகளவில் உயர்வடையும் என்றும் அவர் தெரிவித்தார்.





