அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டைம் இதழ், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசியல், வணிகம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தும் நபர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுப் பட்டியலில் இந்திய வேர்களைக் கொண்டவர்களாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மிச்செலின் நட்சத்திர சமையற்கலைஞர் விகாஸ் கன்னா, நடிகர் ரன்பீர் கபூர், யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் மற்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் லியோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஜி ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2026 ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத் தளபதி ரீட் வைஸ்மேன் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் ஒலிம்பிக் வீராங்கனைகள் அலிசா லியூ, ஹிலாரி நைட், குளோ கிம் ஆகியோர் சாதனைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் கிரண் முசுனுரு மற்றும் ரெபேக்கா அஹ்ரன்ஸ்-நிக்லாஸ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.





