டெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்த நிலையில், பிதா ஹெம்மாட்டி என்ற பெண்ணுக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அவருடன், அவரது கணவர் முகமது ரேசா மஜித் அஸ்ல் மற்றும் அவர்களுடன் வசித்த பெரூஸ், கூரோஷ் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 9 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வகை வழக்கில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.





