மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப்.15 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில், கமல் ஹாசன் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

இன்றைய பிரசார அட்டவணைப்படி, மாலை 3 மணிக்கு சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவர் பிரசாரம் தொடங்குகிறார்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு, மாலை 5 மணிக்கு திரு.வி.க. நகர் தொகுதியில் ரவிச்சந்திரன், மாலை 6 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், இரவு 7 மணிக்கு வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் ஆகியோருக்காக கமல் ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.