பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 2% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த முடிவை அறிவித்தார். இதன் மூலம் தற்போது 58% ஆக உள்ள அகவிலைப்படி 60% ஆக உயர்கிறது.

அதேபோல், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Relief)யும் 2% உயர்த்தப்பட்டு 58% இலிருந்து 60% ஆக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 58% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.