தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது; வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் நிதிநிலைக்கு ஏற்ப பணப்பட்டுவாடா நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி (நா.த.க.) வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அந்த பிரசுரங்களில் அச்சிடப்பட்டுள்ள கியூஆர் குறியீடு வழியாக நிதியுதவி அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதைக் கேட்கும் சில வாக்காளர்கள், “ஓட்டுக்கு பணம் தருவீர்கள் என நினைத்தால், எங்களிடமே பணம் கேட்கிறீர்களே” என்று கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது.

பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், கட்சிகள் களத்தில் பின்பற்றும் மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து பேசுபொருளாக இது மாறியுள்ளது.