புதுடில்லியில் இருந்து வெளியான அறிவிப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
2029 லோக்சபா தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கான முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவை இடம்பெற்றன.
ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகுக்கும் 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் தேவையான இரு-மூன்றில் பெரும்பான்மையை பெறவில்லை. 352 எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் பிரதமரின் இன்று இரவு உரையில் என்ன கூறப்படுமென பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





