திருச்சி கிழக்கு தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
மதியம் விமானத்தில் திருச்சி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் பிரசாரம் நடைபெறும் பகுதிக்கு சென்றார். வழியெங்கும் திரண்ட மக்கள் அவரை வரவேற்றனர்.
வயர்லெஸ் சாலை, கேகேநகர் பஸ் ஸ்டாண்ட், கொட்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்ற விஜய்க்கு ஆதரவாளர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கினர். மலர்கள், மாலைகள், நிறக் காகிதங்கள் மற்றும் கட்சிக் கொடிகள் வீசப்பட்டன.
பின்னர், தொகுதிக்குட்பட்ட அந்தோணியார் சர்ச்சுக்கு சென்ற விஜய், அங்கு மண்டியிட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்தார்.
விஜயை பார்க்க இளைஞர்கள் பெருமளவில் சாலைகளில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.





