நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜயை எதிர்த்து அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த பிப்ரவரியில் சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், விஜய்க்கு நடிகை ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக குற்றம்சாட்டியதாகவும், அதனைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு செங்கல்பட்டு முதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், இன்று அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகினர். விஜய் தரப்பு வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்க கோரியதைத் தொடர்ந்து, நீதிபதி சசிகலா வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.