சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.13.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சோதனை நேரத்தில் அங்கிருந்த இருவர் அதிகாரிகளிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பியதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து மக்கள் சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் நிருபர்கள், அவரது அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை என்றும் யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்றும் கூறி, மேலதிக விளக்கம் அளிக்காமல் அங்கிருந்து நழுவிச் சென்றார்.





