தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெறும் நிலையில், தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டுக்கு வந்தார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படாது என கூறினார். மேலும், “நானும் ஒரு திராவிடன் தான்” என்று தெரிவித்த அவர், அதை மறக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
தமிழர்கள் தாய்மொழியை காப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும், ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்றும் நாயுடு கூறினார். மகளிர் இடஒதுக்கீட்டை திமுக அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது எனவும், “டில்லியை வீழ்த்தியதாக” முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளித்ததாகவும் அவர் விமர்சித்தார்.
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது; மாறாக 50 சதவீதம் அதிகரிக்கும் என நாயுடு கூறினார். மேலும் சென்னையில் சாலைகள் சரியில்லை, மழைநீர் வடிகால்வாய் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.





