த.வெ.க. தலைவர் விஜய், சென்னையின் நந்தனத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு, பிரசார வாகனத்தில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று திரும்பினார்.
வழியில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் விஜய் முன் இருக்கையிலிருந்து பின் இருக்கைக்கு மாறியதாக கூறப்படுகிறது.
ஆனால், அங்கிருந்த தி.மு.க. கூட்டணியினர் விஜயின் வாகனத்தை நோக்கி உற்சாகமாக ஓடி வந்தனர். இதையடுத்து விஜய் மீண்டும் முன் இருக்கைக்கு வந்தார்; சிலர் செல்பி எடுக்க முயன்று வாகனத்தை நோக்கி வந்தனர்.
கையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளைப் பிடித்தபடி சிலர் கை அசைத்தனர். இளைஞர் ஒருவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை காட்டியதாகவும், சிலர் வாகனத்தை பின்தொடர்ந்து ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவை த.வெ.க. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




