பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணியை கடுமையாக விமர்சித்து, கட்சியின் “மாம்பழ” சின்னத்தை இனி நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தாம் அனுபவிக்கும் வேதனை தமக்கே தெரியும் என குறிப்பிட்ட அவர், அன்புமணி தன் பேச்சைக் கேட்காமல் கொள்கைகளை புறக்கணித்து பணத்திற்காக அலைந்ததாக குற்றம்சாட்டினார். இதனால் தந்தையாகத் தாம் உயிரோடு இருந்தபோதே செத்துவிட்டதாக உணர்ந்ததாகவும் எழுதினார்.

தாம் சிறை சென்றதும் ரத்தம் சிந்தியதும் நினைவூட்டி, அந்த தியாகத்தை இன்று சமூக நீதியின் பெயரில் வியாபாரமாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், தர்மபுரியில் சவுமியா வெற்றி பெற்றால் அந்த மாவட்டம் விரைவில் “அதர்மபுரி” ஆகிவிடும் என எச்சரித்தார். அன்புமணியின் “துரோகக் கும்பலை” தோற்கடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறிய ராமதாஸ், அவர்களுக்கு ஓட்டு போடுவது பெற்ற தகப்பன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளார்.