தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்காக கட்சி முழு உழைப்பையும் கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தேர்தலில் நா.த.க. தனித்து போட்டியிடுகிறது. 234 வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, 180க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்களில் பேசினார்.

முந்தைய சட்டசபை தேர்தலில் நா.த.க. 8.22% வாக்குகளை பெற்ற நிலையில், நடிகர் விஜயின் த.வெ.க. வருகையால் இந்த முறை வாக்கு சதவீதம் குறையலாம் என கருத்துக் கணிப்புகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், பெரிய நடிகர் என்ற பிம்பத்துடன் விஜய் அரசியலுக்கு வந்தாலும் இதுவரை அவரது அரசியல் செயல்பாடு பெரிதாக இல்லை என்றனர். அதே நேரத்தில், நா.த.க. வாக்கு சதவீதம் அல்லது வெற்றி வாய்ப்பு எப்படியிருந்தாலும் அதை ஏற்று அரசியல் பயணம் தொடரும் என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் வீரியமாக கட்சி செயல்படும் என்றும் சீமான் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.