அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது த.வெ.க.வில் இணைந்து கோபி தொகுதியில் போட்டியிடுபவருமான செங்கோட்டையன், தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.
பிரசாரத்தின் கடைசி நாளில் சீத்தாம்மா காலனியில் அவர் இறுதிக்கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, வேலூரில் நடந்த கூட்டத்தின் போது தனது சட்டைப் பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்ததை த.வெ.க. தலைவர் விஜய் கவனித்ததாகவும், பின்னர் தன்னை வீட்டுக்கு அழைத்து, “நீங்கள் சீனியர்; ஜெ. படத்தை பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதுபோல் இதுவரை யாரும் சொல்லவில்லை என கூறியபோது அவர் கண் கலங்கி லேசான அழுகையுடன் உரையை முடித்தார். மேலும், த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் கோபியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்குவேன் என்றும் அவர் கூறினார்.





