தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதலே மக்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஓட்டளித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான தேர்தல் நாளில், கோவையில் ஒரு வித்தியாசமான வரவேற்பு பலரது கவனத்தை ஈர்த்தது. அரசு கலைக் கல்லூரி ஓட்டுச்சாவடியில் ‘டினா’ (TINA) என்ற ரோபோ வாக்காளர்களை வரவேற்றது.

தகவலின்படி, அந்த ரோபோ பாரம்பரிய உடை அணிந்து, கையில் தாம்பாளத்தில் ரோஜா பூக்களும் சாக்லேட்டுகளும் வைத்திருந்தது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்ததும் அன்புடன் வரவேற்று சாக்லேட் வழங்கியது.