சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் மக்கள், சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்களிக்க தங்கள் ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு பெருமளவில் புறப்பட்டனர்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை இரவில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. போதிய பேருந்துகள் இல்லாததால் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.