புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழில் வெளியிட்ட பதிவில், வாக்களிப்பை “புனிதமான” பொறுப்பாகக் குறிப்பிட்டு, அனைத்து வாக்காளர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, தமிழகத்தின் இளைஞர்களும் பெண்களும் பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து, சாதனை அளவிலான ஓட்டுப்பதிவு நடைபெற உதவ வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
தமிழகம் சட்டசபை தேர்தலுக்காக வாக்களிக்க உள்ள நிலையில், அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





