சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாக்களித்து, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.

எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் அவர் மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் ஓட்டளித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து குறுகிய பேட்டி அளித்தார்.

வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர், “ஒரே வரியில் சொல்கிறேன்; தமிழகம் வெல்லும்” என்று கூறினார்.

மேலும், நடிகர் அஜித் வாக்களித்த பின் ‘மாற்றம் வேண்டுமா’ என்ற கேள்விக்கு ‘தேவையில்லை’ என்று கூறியதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நல்ல கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.