திருப்பத்தூரில் வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தவெக ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் வீடியோ எடுத்தால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு, வாக்களித்த வீடியோவை பதிவிட்டதாக கூறப்படும் சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற வீடியோக்களை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





