வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் ‘பூத் ஸ்லிப்’ வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பூத் ஸ்லிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையையும் எடுத்துச் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் புகைப்படம் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக கமிஷன் தெரிவித்துள்ளது. விதிமீறி புகைப்படம் எடுத்தால் அதிகபட்சமாக மூன்று மாதம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.