சென்னை: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவானதை தொடர்ந்து, வாக்காளர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பாராட்டினார்.
நேற்று அளித்த பேட்டியில், இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற்ற “ஜனநாயக திருவிழாவில்” பங்கேற்ற ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் கமிஷன் தலைவணங்குகிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





