ஈரான் தொடர்பான பயண ஆலோசனையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதுப்பித்து வெளியிட்டு, இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தியா–ஈரான் இடையே சில விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

பிராந்திய பதற்றம் முழுமையாக தணியாததும், வான்வெளி கட்டுப்பாடுகள் தொடர்வதும் காரணமாக தற்போது ஈரானுக்குச் செல்லும் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், நிலவும் சூழல் காரணமாக ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் ஈரானுக்கு வருகை தரும் சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா–ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தியர்கள் வான்வழி மூலமாகவோ அல்லது தரைவழி மூலமாகவோ ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.