அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்ற சூழலில், சமூக வலைதளங்களில் ஈரான் வெளியிடும் பதிவுகள் கவனம் பெறுகின்றன. அந்த வரிசையில், டொனால்டு டிரம்பை கிண்டலடிக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஈரான் பகிர்ந்துள்ளது.
கார்ட்டூன் வடிவில் வரும் அந்த காட்சியில், பேச்சுவார்த்தை மேசையில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் டிரம்ப் காத்திருக்கிறார். எதிர்புறம் யாரும் இல்லாத நிலையிலும், “ஈரானுடன் மிகச் சிறந்த பேச்சு நடக்கிறது” என்று தன் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக காட்டப்படுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்தும் ஈரான் தரப்பில் யாரும் வராத நிலையில், திரையில் “2000 ஆண்டுகளுக்குப் பின்” என்ற வாசகம் தோன்றுகிறது. பின்னர் காலி நாற்காலிகளை பார்த்து, பேச்சுக்கு வராவிட்டால் குண்டு வீசுவோம் என அவர் மிரட்டுவதாக வீடியோவில் காட்டப்படுகிறது.
அப்போது ஒரு உதவியாளர் கொடுக்கும் சீட்டில் “வாயை மூடு டிரம்ப்” என்று எழுதப்பட்டிருப்பதாக காட்சி வருகிறது. இதையடுத்து, “பாகிஸ்தான் கேட்டதால் போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறேன்” என்று கூறி அவர் நழுவுவதாக வீடியோ முடிகிறது.





