கோல்கட்டா பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை காலை ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டு படகில் பயணம் செய்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், அன்னை கங்கைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக அந்த நேரம் அமைந்ததாக கூறினார். நதியின் இயற்கை அழகை புகைப்படமாகப் பதிவு செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பின்போது படகோட்டிகளை நேரில் சந்தித்ததாகவும், அவர்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். காலை நடைப்பயிற்சிக்காக வந்தவர்களுடனும் உரையாடியதாக கூறினார்.

ஹூக்ளி நதிக்கரையில் கழித்த காலை நேரம் “மிகச் சிறப்பானது” என அவர் தெரிவித்தார். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டதாக கூறிய அவர், மேற்குவங்க மக்களின் மனதில் கங்கை தனிச்சிறப்பான இடம் பெற்றுள்ளதாகவும், நதியின் தெய்வீகமும் நாகரிகப் பாரம்பரியமும் காலத்தால் அழியாதவை என்றும் குறிப்பிட்டார்.