சென்னை: தமிழகத்தில் சாதனை அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று, ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையை வாக்காளர்கள் பொறுப்புடன் நிறைவேற்றியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சமூக வலைத்தளப் பதிவில், “ஜனநாயக திருவிழா” என அவர் குறிப்பிட்ட தேர்தலில் மக்கள் காட்டிய பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். மேலும், பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும் கூறினார்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார். சிலர் வாக்களித்துவிட்டு இரவே மீண்டும் தங்கள் பணியிட நகரங்களுக்கு திரும்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
“ஒரு ஓட்டு தானே” என்று எண்ணாமல், இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்ற எண்ணமே இந்த உந்துதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஸ்டாலின் கூறினார். பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்த அவர், தமிழகம் வாக்களித்து விட்டதாகவும், மே 4-ம் தேதி வெல்வோம் என்றும் பதிவிட்டார்.





