தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுவரை காணாத அளவில் ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் குவிந்தது. மாநிலம் முழுவதும் 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை முதலே பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனர். பல மாவட்டங்களில் பகல் நேர வெயில் கடுமையாக இருந்தாலும், வாக்காளர்கள் வருகை குறையவில்லை.
இந்த பெரும் பங்கேற்பு எதைக் குறிக்கிறது என்பதில் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன. இது வாக்காளர்களின் “மவுன புரட்சி”யா, கடும் போட்டியின் தாக்கமா, இளைஞர்களின் அதிகரித்த ஆர்வமா, மாற்றத்திற்கான அறிகுறியா, அல்லது ஆதரவு அலையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தி.மு.க. தரப்பு, தங்களின் ஐந்தாண்டு கால திட்டங்களால் மக்கள் ஈர்க்கப்பட்டு அமோக ஆதரவு அளித்ததாக கூறுகிறது. அ.தி.மு.க. தரப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் அவலத்திற்கு எதிராக மக்கள் திரண்டு வந்து வாக்களித்ததாக வலியுறுத்துகிறது.
த.வெ.க. தரப்பு, இளைஞர்கள் மற்றும் பெண்கள் தன்னெழுச்சியாக வாக்களித்தது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என நம்பிக்கை தெரிவிக்கிறது.




