தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) செடி, தொட்டவுடன் இலைகள் மடங்கி கீழே தொங்குவது காரணமாகவே அனைவருக்கும் பரிச்சயமானது.

இந்த செடியின் இலைகளில் உள்ள சில செல்களில் திரவப் பொருட்கள் இருக்கும். அந்தத் திரவத்தின் அழுத்தம் காரணமாக இலை நிமிர்ந்து நிற்கிறது.

இலையைத் தொடும்போது தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை குறைந்து விடுகிறது; ஆனால் மேல்பகுதியில் அதே அளவில் திரவம் நீங்குவதில்லை.

இதன் விளைவாக மேல்பகுதியின் எடை காரணமாக முழு இலை நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது. இதுவே தொட்டால் சிணுங்கி இலை சுருங்குவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.