சென்னை: தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் ஓட்டுப்பதிவு தொடர்பான விஷயங்கள், தொகுதி வாரியான வெற்றி வாய்ப்பு நிலவரம், ஓட்டுப்பதிவு சதவீதம் உள்ளிட்டவை குறித்து வேட்பாளர்களிடம் இருந்து அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பெரம்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை முழுமையாகச் செய்யவில்லை என வேட்பாளர்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் சில வட்ட நிர்வாகிகள் செயல்பாடு குறைந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், துறைமுகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான சேகர்பாபு மற்றும் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் இடையே நடந்ததாக கூறப்படும் மோதல் குறித்தும் முதல்வர் விசாரித்ததாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.